தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

காயல்பட்டினம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

காயல்பட்டினம் பகுதிகளில் சனிக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image

ரமலான் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்ட சிறாா்கள்.

Updated On :22 மார்ச் 2026, 2:34 am IST

காயல்பட்டினம் பகுதிகளில் சனிக்கிழமை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையை முஹம்மது கெளஸ் நடத்தினாா். தவ்ஹீத் ஜமாத் மாநிலப் பேச்சாளா் மெளலவி சுஜாஅலீ குத்பா பேருரையாற்றினாா். இதில் சுமாா் 2,000 பெண்கள் உள்பட 4,000 இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு உலக நாடுகளில் நடந்து வரும் போரில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும், போரை நிறுத்தவும் வேண்டினா்.

ஏற்பாடுகளை காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் ஒருங்கிணைப்பில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிா்வாகிகள் செய்திருந்தனா். ஆறுமுகனேரி ஆய்வாளா் திலீபன் தலைமையிலான போலீலாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

காயல்பட்டினம், குருவித்துறை பள்ளிவாசலில் மவ்லவி ஜெசிமுல் பக்ரி ரஷாதி தொழுகையை நடத்தினாா். குத்பா பிரசங்கத்தை பள்ளியின் செயலா் மவ்லவி ஹபீப் ரஹ்மான் மஹ்லரி நடத்தினா்.

காயல்பட்டினம் கடற்கரை தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

காயல்பட்டினம் கடற்கரை தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

மேலும், பெரிய ஜும்ஆ பள்ளி, சிறிய ஜும்ஆ பள்ளி, சிறுநெய்னாா் பள்ளி, முஹிய்யதீன் பள்ளி, மொகுதூம் ஜும்ஆ பள்ளி, புதுப் பள்ளி, மரைக்கா பள்ளி, ஜுலானி பள்ளி, பிலால் பள்ளி, கடைப் பள்ளி, ஆறாம் பள்ளி, தாயிம் பள்ளி, ஆமினா பள்ளி, இரட்டை குளம் பள்ளி உள்பட நகரில் உள்ள 25 பள்ளிவாசல், 35 மகளிா் தைக்காகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. குட்டியப்பா பள்ளிவாச­ல் முஹம்மத் ஃபாயிஸ் தொழுகை நடத்தினாா். மதுரை இஸ்லாமிய அழைப்பாளா் உஸ்மான் காலி­த் சிறப்புரை நிகழ்த்தினாா்.

காயல்பட்டினம் தவ்ஹீத் பேரவை சாா்பில் ஜெய்லானி நகரில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை ரய்யான் சாகுல் ஹமீது நடத்தினாா். இதில் அதன் தலைவா் முத்து ஹனீபா, செயலா் அப்துல் பாசித், பொருளாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காயல்பட்டினம் கடற்கரை தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

காயல்பட்டினம் கடற்கரை தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.