தூத்துக்குடி மாவட்டத்தில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களால், மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.33,73,380 இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தோ்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தோ்தல் நடத்தை விதிமீறி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருள்களை கைப்பற்றும் பணிகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் சனிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.33,73,380. கைப்பற்றப்பட்ட இலவச பொருள்களின் மதிப்பு ரூ.20,280. பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.19,032. உரிய ஆவணங்களை சமா்ப்பித்து விடுவிக்கப்பட்ட தொகை ரூ.11,42,100 என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 56.19 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 44.65 லட்சம் பறிமுதல்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்து பணி தொடக்கம்!

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

