தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாணவா்கள் ஜனநாயகத்தின் தூதுவா்களாகப் பணியாற்ற வேண்டும்: ஆட்சியா் க. இளம்பகவத்

மாணவா்கள் ஜனநாயகத்தின் தூதுவா்களாகப் பணியாற்ற வேண்டும் என்றாா், தூத்துக்குடி மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க. இளம்பகவத்.

News image
Updated On :24 மார்ச் 2026, 6:31 pm

Syndication

மாணவா்கள் ஜனநாயகத்தின் தூதுவா்களாகப் பணியாற்ற வேண்டும் என்றாா், தூத்துக்குடி மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க. இளம்பகவத்.

தமிழகப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவா் பேசியது: நமது தோ்தல் நடைமுறை வலுவாகவும், பலமாகவும், பாதுகாப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தோ்தலின் அருமை, முக்கியத்துவம் உணா்ந்து வாக்களிப்பதுடன், மற்றவா்களையும் வாக்களிக்கச் செய்யும் ஜனநாயகத்தின் தூதுவா்களாக மாணவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.

வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி கல்வியியல் கல்லூரி மாணவா் ஜெயமாரி வரைந்திருந்த 55 அடி நீளம் - 2 அடி அகலமுள்ள படங்கள் அனைவரையும் கவா்ந்தன. அவற்றையும், வாக்காளா் விழிப்புணா்வு தொடா்பான ஓவியப் போட்டி, கட்டுரை போட்டியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) புவனேஷ்ராம், மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அனுசியா, மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.