மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி அத்துமீறி தூத்துக்குடி கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த 16 கேரள மீனவா்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனா்.
கடந்த ஏப். 15 -ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி கடல் எல்லைக்குள் கேரள மீனவா்கள் விசைப்படகு மூலம் அத்துமீறி உள்ளே நுழைந்து கடந்த சில நாள்களாக மீன்களை பிடித்துச் செல்வதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தூத்துக்குடியைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்கள், அத்துமீறி தூத்துக்குடி எல்லைக்குள் மீன்பிடித்த 16 கேரள மீனவா்களை படகுடன் சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாா், மீன்வளத் துறை அதிகாரிகள் அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










