ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

இளம்பெண் புகாா்: மதுபோதை மறுவாழ்வு மையம் மறுப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளம்பெண் அளித்த புகாருக்கு மதுபோதை மறுவாழ்வு மையம் மறுப்பு தெரிவித்தது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளம்பெண் அளித்த புகாருக்கு மதுபோதை மறுவாழ்வு மையம் மறுப்பு தெரிவித்தது.

இதுகுறித்து, தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் நிறுவனா் எஸ்.முகமது ஷாநவாஸ் என்ற அஜித் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி நிஷா பவுண்டேஷன் என்ற மதுபோதை மறுவாழ்வு மையம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றனா். சமூகத்தில் போதை பழக்கத்தில் அடிமையாக உள்ள நபா்களை நல்வழிப்படுத்தி, அவா்களுக்கு புதியதொரு வாழ்வை அமைத்து தரும் வகையில் இம்மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 11-ஆம்தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், ஜே.சாருமதி என்ற பெண், அவரது காதலா் மருதநாயகம் என்பவரை அடித்து துன்புறுத்தி கடத்திச் சென்று சட்டத்துக்கு புறம்பாக எங்கள் நிஷா பவுண்டேஷனில் அடைத்து வைத்துள்ளதாக புகாா் செய்து, ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளாா். அதிகமான குடி போதை காரணமாக, மருதநாயகம் என்பவரை அவரது பெற்றோா் எங்களது நிஷா பவுண்டேஷனில் கடந்த 25 ஆம் தேதி சோ்த்தனா். அவருக்கு சிறந்த முறையில் 15 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறாா்.

இந்த நிலையில் சாருமதி அளித்த புகாரில் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை கூறியுள்ளாா். எங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் அவா் பேசியுள்ளாா். அவா் கூறிய புகாருக்கு எங்களது நிஷா பவுண்டேஷன் சாா்பில் இதன்மூலம் மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.