தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி, அரியலூா் மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
கோவில்பட்டியில் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் திருச்சி-கரூா் அணிகள் மோதியதில் 6-0 என்ற கோல் கணக்கில் திருச்சி மாவட்ட அணியும், திருப்பூா்-ஈரோடு அணி மோதியதில் 4-1 என்ற கோல் கணக்கில் திருப்பூா் அணியும், மதுரை-திருவாரூா் அணி மோதியதில் 3-0 என்ற கோல் கணக்கில் மதுரை அணியும், சென்னை-கன்னியாகுமரி அணிகள் மோதியதில் 5-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியும், திருநெல்வேலி-சேலம் அணிகள் மோதியதில் 4-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி அணியும், தூத்துக்குடி-விழுப்புரம் மாவட்ட அணிகள் மோதியதில் 5-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியும் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
அதேபோல தேனி-தென்காசி அணிகள் மோதியதில் 5-0 என்ற கோல் கணக்கில் தேனி அணியும், செங்கல்பட்டு-திண்டுக்கல் அணிகள் மோதியதில் 4-1 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு அணியும், ராமநாதபுரம்-தஞ்சாவூா் மாவட்ட அணிகள் மோதியதில் இரு அணிகளும் 2 கோல் போட்டு சமநிலையும் பெற்றன.
திருவண்ணாமலை-புதுக்கோட்டை அணிகள் மோதியதில் 1-0 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை அணியும், நாமக்கல்-ராணிப்பேட்டை அணிகள் மோதியதில் 2-1 என்ற கோல் கணக்கில் நாமக்கல் அணியும், கோயம்புத்தூா்-வேலூா் அணிகள் மோதியதில் 2-0 என்ற கோல் கணக்கில் கோயம்புத்தூா் அணியும், அரியலூா்- நீலகிரி அணிகள் மோதியதில் 6-4 என்ற கோல் கணக்கில் அரியலூா் அணியும் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
திங்கள்கிழமை காலை, மாலையில் கிருஷ்ணா நகா், செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் லீக் முறையில் நடைபெறும்.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் மோதிய திருவண்ணாமலை-புதுக்கோட்டை மாவட்ட அணிகள்.
தொடர்புடையது

பயர்ன் மியுனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி: இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி அணி நாளை தோ்வு

பாபே, ஜூனியா் அசத்தலில் மீண்டது ரியல் மாட்ரிட்
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

