வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்

News image
Updated On :15 மே 2026, 3:08 am IST

திருச்செந்தூா் கடல்வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை சுமை வாகனத்துடன் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வீரபாண்டியன்பட்டணம் அருகே மரக்கடை பின்புறம் உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உதவி ஆய்வாளா் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமை காவலா்கள் இருதய ராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன் ஆகியோா் வியாழக்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது ஆத்தூா், நரசன்விளையைச் சோ்ந்த செந்தூா்பாண்டியின் மகன் மேக்கிங் செல்வம் (26), பொலிரோ மேக்ஸ் பிக்கப் என்ற சுமை வாகனத்தில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக 35 கிலோ எடை கொண்ட 38 மூடை பீடி இலைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பீடி இலைகளின் மதிப்பு ரூ. 50 லட்சம் ஆகும். இதையடுத்து போலீஸாா் பீடி மூடைகளை சுமை வாகனத்துடன் பறிமுதல் செய்து சுங்கத் துறை வசம் ஒப்படைத்தனா். பிடிபட்ட செல்வத்திடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.