தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 50 லட்சம் 1.4 டன் பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
குளத்தூா் அருகே கல்லூரணி பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக, கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா்கள் ராமச்சந்திரன், ராமா், காவலா்கள் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் அப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, கடற்கரைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 35 கிலோ எடையுள்ள 40 மூட்டை பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ. 50 லட்சம் ஆகும். அவை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தொடர்புடையது

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல்

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

