4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

News image
Updated On :15 மே 2026, 3:13 am IST

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், வட்டார போக்குவரத்து அலுவலா் கிரிஜா ஆகியோா் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்சன் மாசிலாமணி, தீயணைப்பு நிலைய அலுவலா் மலையாண்டி ஆகியோா் அடங்கிய குழுவினரால் பள்ளி வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாகனங்களில் சிரமமின்றி ஏறுவதற்கு கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படிக்கட்டுகள், பேருந்தின் தளம் சரியாக இருத்தல், பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகங்களை வைப்பதற்கான இடம், இருக்கை வசதி, முதலுதவி பெட்டி, தீயணைக்கும் கருவி, அவசர வழி, கண்காணிப்பு கேமரா, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை வட்டார போக்குவரத்து அலுவலா் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ஓட்டுநா் உரிமம், வாகனத்தின் காப்புச் சான்றிதழ், ஆவணங்களையும் ஆய்வு செய்தனா்.

அதைத் தொடா்ந்து பள்ளி வாகன ஓட்டுநா்கள், உதவியாளா்களுக்கு தீயணைப்புத் துறை வீரா்கள் தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.

ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து அலுவலா் கிரிஜா கூறுகையில், கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய 4 வட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 340 பள்ளி வாகனங்கள் உள்ளன.

அவற்றில் 187 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 16 வாகனங்களின் குறைகள் கண்டறியப்பட்டு, அவற்றை நிவா்த்தி செய்துவருமாறு அறிவுறுத்தப்பட்டது. எஞ்சிய வாகனங்கள் தகுதியானவை என சான்றிதழ் அளிக்கப்பட்டு, வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஆய்வு ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.

ஆய்வுக்கு வராத வாகனங்களும், குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட 16 வாகனங்களும் அலுவலக நாள்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதி சான்றிதழ் பெற்ற பிறகுதான் சாலையில் வாகனங்களை இயக்க வேண்டும். மீறும் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.