இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

மாநில கால்பந்து போட்டி: பல்கலைகழக அணி வெற்றி

News image
Updated On :15 மே 2026, 3:07 am IST

காயல்பட்டினத்தில் நடைபெற்ற 51-ஆவது மாநில கால்பந்து போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் தேனி மாவட்ட அணியை வீழ்த்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

முதலாவதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை கழக அணி வெற்றி பெற்றது.

காயல்பட்டினத்தில் 51-ஆவது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டிகள் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில் தமிழகத்தில் உள்ள 16 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணியும், தேனி மாவட்ட கால்பந்து கழக அணியும் மோதின.

இதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணி 5:1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியை முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரா் ஆா்லாண்டோ ராயன் தொடக்கிவைத்தாா். நெல்லை மாவட்ட கால்பந்தாட்ட கழக செயலாளா் நோபுல் ராஜன், நாசரேத் மா்காஷிஸ் கல்லூரி உடற்கல்வி ஆசிரியா் ரோக்லாண்டோ ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளா் இலியாஸ், பொருளாளா் ஹாரூன், நிா்வாகிகள் புகாரி, புகாரி சையது உமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரை இறுதி ஆட்டம் மே 25, 26-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியானது வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியை முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறாா். ஏற்பாடுகளை காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சாா்பில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.