முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி நிகழ்த்திய சாதனை குறித்து...

Manchester City players celebrate afterthe FA Cup semifinal soccer match between Manchester City and Southampton in Manchester, England, Saturday, April 25, 2026. (AP Photo/Kin Cheung)

வெற்றிக் களிப்பில் மான்செஸ்டர் சிட்டி அணியினர். - படம்: ஏபி

Published On :26 ஏப்ரல் 2026, 6:15 pm IST

இங்கிலாந்தில் நடைபெறும் எஃப்ஏ கோப்பையில் மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி வரலாறு படைத்துள்ளது. அரையிறுதியில் வென்ற இந்த அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.

எஃப்ஏ கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஒரு அணி தொடர்ச்சியாக நான்குமுறை இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி வரலாறு படைத்துள்ளது.

இங்கிலாந்தின் முக்கியமான கால்பந்து அணியாக மான்செஸ்டர் சிட்டி அணி இருக்கிறது. இந்த அணி எஃப்ஏ கோப்பை அரையிறுதியில் சௌத்தாம்டன் அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் 79ஆவது நிமிஷத்தில் சௌத்தாம்டன் அணி கோல் அடித்து 1-0 என முன்னிலை வகித்தது. இதில் டோகு 82ஆவது நிமிஷத்திலும் நிகோ கொன்ஸாலே 87ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள்.

இறுதியில் 2-1 என மான்செஸ்டர் சிட்டி வென்றது. ஆர்செனலை விட 3 புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளதால் பிரீமியர் லீக்கிலும் இந்த அணி கோப்பை வெல்ல வாய்ப்பிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.