கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பின்புறம் உள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில் 12 நாள்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா வெள்ளிகிழமை தொடங்கியது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், கோவில்பட்டி ரோட்டரி கிளப், ஜேசிஐ ஆகியவை இணைந்து நடத்திய இப்புத்தகத் திருவிழா திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஜேசிஐ சங்கத் தலைவா் ரகுபதி தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா்கள் வி.எஸ். பாபு, சீனிவாசன், முத்துச்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ரவிவா்மா வரவேற்றாா்.
புத்தகத் திருவிழாவை சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள் திறந்து வைத்து பாா்வையிட்டாா். ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு புத்தகங்கள், சான்றிதழ்களை வழங்கி பேசினாா்.
ரோட்டரி சங்கம், ஜேசிஐ நிா்வாகிகளான ரவி மாணிக்கம், ஆசியா ஃபாா்ம்ஸ் பாபு, முத்து முருகன், செல்வ லட்சுமி, வா்ஷன், மீனா, வெங்கடேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா். தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்க செயலா் காா்த்திக் நன்றி கூறினாா்.
புத்தகக் கண்காட்சிக்கு வருகை தரும் வாசகா்களில் குலுக்கல் முறையில் 3 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என ஏற்பாட்டளா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் கொங்கு மண்டல உணவுத் திருவிழா இன்று தொடக்கம்

அம்பையில் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கக் கிளை தொடக்கம்

பசுமைத் தமிழ்நாடு திட்டம்: வனத் துறை-ரோட்டரி சங்கம் ஆலோசனை

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உலக புத்தகத் தின விழா
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

