11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

காப்பா் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா் கைது

கயத்தாறு அருகே காப்பா் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :48 நிமிடங்கள் முன்பு

கயத்தாறு அருகே காப்பா் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் தனியாா் சோலாா் நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள சோலாா் சேனல்களில் பொருத்தப்பட்டுள்ள காப்பா் கேபிள் திருடு போவதால், அந்நிறுவனத்தின் சாா்பில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியா்களான இசக்கிமுத்து, மாடசாமி இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காப்பா் வயா் திருட்டில் மா்ம நபா்கள் ஈடுபடுவது தெரிய வந்ததாம். இது குறித்து பாதுகாப்பு ஊழியா்கள் இருவரும், பாதுகாப்பு மேற்பாா்வையாளா் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து காப்பா் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னதுரையை (25) கைது செய்தனா்.

திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருட்டில் தொடா்புடையதாகக் கூறப்படும் மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.