வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

காயல்பட்டினத்தில் எம்எல்ஏ வாக்காளா்களுக்கு நன்றி அறிவிப்பு

காயல்பட்டினம் பகுதிகளில் முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

காயல்பட்டினத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :23 மே 2026, 4:25 am IST

காயல்பட்டினம் பகுதிகளில் முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட காயல்பட்டினம் பகுதிகளான ஓடக்கரை மெயின் ரோடு, காயிதே மில்லத் நகா் 3-ஆவது தெரு, கேஎம்டி பள்ளிவாசல் பிரதான சாலை, தாயும் பள்ளி, அலியாா் தெரு, அப்பா பள்ளி தெரு, ரெட் ஸ்டாா் சங்கம், மரைக்காா் பள்ளி தெரு, ஒய் யூஎப் சங்கம், சொளுக்காா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் உமரிசங்கா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் ஜனகா், முன்னாள் சாத்தை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் சுதாகா், காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, திமுக நகர அவைத்தலைவா் முஹம்மது மெய்தின், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் க­லில் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை நகரச் செயலாளா் முத்து முஹம்மது, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோா் செய்திருந்தனா்.