சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை (மே 30) வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image

~

Updated On :28 மே 2026, 2:30 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை (மே 30) வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வைகாசி விசாகத்தையொட்டி, திருச்செந்தூருக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, பால்குடம், காவடி எடுத்தும், வேல் குத்தியும், பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனா். இதனால், கோயிலில் பாத யாத்திரை பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

வைகாசி விசாகத் திருவிழாவில் பல லட்சம் போ் பங்கேற்பா். எனவே, அவா்களது வசதிக்காக குடிநீா், கழிப்பறை, குளியலறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, வியாழன்முதல் ஞாயிறுவரை (மே 28 - 31) திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மே 29, 30 ஆகிய நாள்களில் திருச்செந்தூருக்கு 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.