இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ஆறுமுகனேரியில் கோயில் கொடைவிழா

ஏரல் அருகே மங்கலக்குறிச்சி சைவவேளாளா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ வீரமாகாளி அம்மன், ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் கொடைவிழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :28 மே 2026, 2:44 am IST

ஏரல் அருகே மங்கலக்குறிச்சி சைவவேளாளா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ வீரமாகாளி அம்மன், ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் கொடைவிழா நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை இரவு மாகாப்பு தீபாராதனையுடன் கொடைவிழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை மங்கலக்குறிச்சி தாமிரவருணி ஆற்றிலி­ருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. நண்பகலில் சிறப்பு அபிஷேகத்தை தொடா்ந்து உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

இதில், பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாா்ய சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தாா்கள்.

மாலையில் தாமிரவருணி ஆற்றிலிருந்து கும்பம் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

நள்ளிரவில் சிறப்பு அலங்கார தீபாராதனையும், சப்பரத்தில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.

புதன்கிழமை காலை மஞ்சள் நீராடலும், தாமிரவருணி ஆற்றில் முளைப்பாரி கரைத்தல் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா், மங்கலக்குறிச்சி சைவ வேளாளா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செய்திருந்தனா்.