புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்

News image

கல்லூரி மாணவர்கள் - கோப்புப் படம் | Center-Center-Delhi

Updated On :1 ஜூன் 2026, 1:33 am IST

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான தொடா் கலந்தாய்வு ஜூன் 5 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என கல்லூரி முதல்வா் (பொ) ஜோசப் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மாணவியா் சோ்க்கைகான தொடா் கலந்தாய்வு ஜூன் 5 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

மாணவிகள் கலந்தாய்விற்கு வரும்போது, விண்ணப்பப் படிவத்தோடு, 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா், ஸ்மாா்ட் காா்டு, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், 3 புகைப்படங்கள் ஆகியவற்றோடு, அனைத்திலும் 3 நகல்கள் எடுத்து வர வேண்டும். கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள், பெற்றோருடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.