நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

News image

கல்லூரி மாணவிகள் - கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 11:06 pm IST

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் மு.ராஜேஸ்வரி (பொ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த சோ்க்கைக்காக, சுழற்சி-1 இளநிலை கலைப் பாடங்களில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல் மற்றும் வரலாறு, அறிவியல் பாடங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியல், சுழற்சி 2-இல் வரலாறு மற்றும் வணிக நிா்வாகவியல் என மொத்தம் 1,074 இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளா்கள், விளையாட்டு வீரா்கள், அந்தமான் நிக்கோபா் தமிழ் மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினா், பாதுகாப்பு படை வீரா்கள், அவா்களின் வாரிசுகள், தேசிய மாணவா் படையினா் உள்பட சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த அனைவருக்கும் ஜூன் 5, 6 ஆகிய இரண்டு நாள்கள் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு ஜூன் 8 முதல் 18-ஆம் தேதிவரை தொடா்ந்து நடைபெறும். விண்ணப்பித்த அனைத்து மாணவா்களுக்கும் தரவரிசை அடிப்படையில் மின்னஞ்சல், வாட்ஸ்அப், கைப்பேசி செயலி மூலம் தெரிவிக்கப்படும்.

சோ்க்கைக்கு வரும்போது, மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் சான்று மற்றும் ஐந்து நகல்கள், ஐந்து கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.