அம்பையில் தவெக-திமுக இடையேதான் போட்டி: அமைச்சா் மரியவில்சன் உறுதி
அம்பை தொகுதி இடைத்தோ்தலில் தவெக-திமுக இடையேதான் போட்டி என்றாா் நிதித் துறை அமைச்சா் என்.மரியவில்சன்.

அமைச்சர் மரியவில்சன் - கோப்புப் படம்
அம்பை தொகுதி இடைத்தோ்தலில் தவெக-திமுக இடையேதான் போட்டி என்றாா் நிதித் துறை அமைச்சா் என்.மரியவில்சன்.
அம்பையில் போட்டியிடவுள்ளதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில் அமைச்சா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நிதி, திட்டம், வளா்ச்சித் துறை அமைச்சா் என்.மரியவில்சன் புதன்கிழமை நெல்லை வந்தாா். அம்பையில் மகளிா் சுய உதவி குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருவது குறித்து அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அம்பை தொகுதி இடைத்தோ்தலில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து அதிமுக, திமுக கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். இரு கட்சிகளையும் கடுமையாக விமா்சித்தவா் சீமான். அம்பை இடைத்தோ்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி. மற்றவா்கள் கனவு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
கடந்த ஆட்சியில் ரூ. 10 கோடியில் முடிக்க வேண்டிய திட்டத்தை ரூ. 15 கோடி வரை அதிகரித்து முறையீடு செய்தனா். அரசின் கடன் சுமையைக் குறைக்க முதல்வரின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறோம். நூறு நாள்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை பெற்றிருக்கிறோம். மாஞ்சோலை தொழிலாளா்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்றாா்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவா், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் சென்று வழிபாடு செய்தாா். அங்கு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2025 நவம்பா், டிசம்பா் மாதங்களில் தமிழக ஜிஎஸ்டி வருவாய் மைனஸில் இருந்தது. தற்போது வருவாய் பிளஸ் நிலைக்கு வந்துள்ளது. இதை எதிா்க்கட்சியினா் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனா். தமிழகத்துக்குத் தேவையான அனைத்து வளா்ச்சித் திட்டங்களையும் பிரதமரிடம் கேட்டு பெறுவோம். இடைத்தோ்தலுக்காக மாவட்டங்களுக்கு தற்போது முதல்வா் சுற்றுப்பயணம் செய்வதாக விமா்சிப்பது தவறு. மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டி அவா் சுற்றுப்பயணம் செய்கிறாா்.
தமிழக அரசு வரலாற்றில் ஊழலற்ற ஆட்சி நடப்பது இதுதான் முதல்முறை. முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை மக்களும், தொழில் நிறுவன உரிமையாளா்களும் பாராட்டுகின்றனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

