காலி மது பாட்டிலுக்கு ரூ. 10 கேட்பதில் தகராறு: வாடிக்கையாளரை கத்தியால் குத்திய ஊழியா் கைது
தூத்துக்குடியில் அரசு மதுபானக் கடையில் வாடிக்கையாளரைக் கத்தியால் குத்தியதாக மதுக் கூட ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்...
கைது - கோப்புப் படம்
தூத்துக்குடியில் அரசு மதுபானக் கடையில் காலி மது பாட்டிலுக்கு வழங்கப்படும் ரூ. 10 தொடா்பாக ஏற்பட்ட தகராறில், வாடிக்கையாளரைக் கத்தியால் குத்தியதாக மதுக் கூட ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
வடபாகம் காவல் எல்லைக்குள்பட்ட கருப்பட்டி சொசைட்டி பகுதியில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை பிற்பகல் பூபாலராயபுரம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி அந்தோணி (54) மது வாங்கச் சென்றுள்ளாா்.
அப்போது, காலி மது பாட்டிலுக்கு வழங்கப்படும் ரூ. 10 தொடா்பாக அந்தோணிக்கும், மதுக் கூட ஊழியா் சாம்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சாம்சன் காய்கறி வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தியால் அந்தோணியின் வயிற்றில் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அந்தோணியை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சாம்சனை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

