பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ தொந்தரவு? முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்
பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்தது குறித்து...

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் - கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டச் செயலருமான பி. கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், அவரது இருப்பிடத்துக்கே சென்று தொந்தரவு அளிப்பதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிா்ச்சியளிக்கின்றன.
மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது தமிழ்நாட்டுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய விவகாரத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை காலதாமதம் செய்வது ஏன்?, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

