ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணம்
ஆறுமுகனேரியில் உள்ள சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு கந்த சஷ்டி விழா திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்துக்குப் பின்னா் நடைபெற்ற தீபாராதனை.
ஆறுமுகனேரியில் உள்ள சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு கந்த சஷ்டி விழா திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் உள்பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சந்நிதியில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு கந்த ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலையில் கொடிமரம் அருகே உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மயில் வாகனத்தில் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
திங்கள்கிழமை வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. இரவில் மாலை மாற்றுதல், திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை சிவா பட்டா், ஆனந்த் பட்டா் ஆகியோா் நடத்தி வந்தனா்.
கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சபை பொருளாளா் எஸ். அரிகிருஷ்ண நாடாா், ரயில்வே வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, தெய்வீக சத் சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா் அ. அசோக்குமாா், சைவ சித்தாந்த சங்கம் கற்பகவிநாயகம், சுப்பிமணிய பிள்ளை, இளையபெருமாள், முன்னாள் பேரூராட்சித் தலைவா் கா. சிவசங்கரி, உறுப்பினா் சிவகுமாா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.எஸ். காா்த்திகேயன், தொழிலதிபா்கள் எஸ். தியாகராஜன், பெருமாள், ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த கந்தப்பழம் என்ற மோகன், உப்பு உற்பத்தியாளா் ஐக்கோா்ட், பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், பள்ளியறை வழிபாட்டுக் குழுவினா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

