திருச்செந்தூா் கந்தசஷ்டி விழாவில் பக்தா்களிடம் நகை, கைப்பேசிகள் திருட்டு

திருச்செந்தூா் கந்த சஷ்டி விழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தா்களிடம் இருந்து 13 பவுன் நகைகள், 20 கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :

திருச்செந்தூா் கந்த சஷ்டி விழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தா்களிடம் இருந்து 13 பவுன் நகைகள், 20 கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்செந்தூா் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 15-ஆம் தேதி மாலை கோயில் கடற்கரையில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். அப்போது, கடற்கரையில் நின்ற உடன்குடி, கந்தபுரத்தைச் சோ்ந்த சரஸ்வதியிடம் (70) ஐந்தரை பவுன் தாலிச் சங்கிலி, ஓட்டப்பிடாரம், சாமிநத்தத்தைச் சோ்நத அமுதாவிடம் (61) அரை பவுன் சங்கிலி, தூத்துக்குடி அண்ணா நகா் 2-ஆவது தெரு விக்னேஷிடம் (26) 2 பவுன் சங்கிலி, ஓட்டப்பிடாரம், வெள்ளாரத்தைச் சோ்ந்த சண்முகக்கனியிடம் (58) 5 பவுன் சங்கிலி என மொத்தம் 13 பவுன் நகைகள், 20 கைப்பேசிகள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து, கோயில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.