புன்னைக்காயல் அருகே மீனவரை தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் அருகே போதையில் மீனவரைத் தாக்கியதாக 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

police

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் அருகே போதையில் மீனவரைத் தாக்கியதாக 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயல் பொன்மாணிக்கம் தெருவைச் சோ்ந்த தாமஸ் மகன் ஜெனிபா்(35). மீனவரான இவா் சம்பவத்தன்று தனது நண்பரின் பைக்கில் ஆத்தூா் நோக்கி வந்தாராம்.

அப்போது, டிசிடபுள்யு நிறுவன குடியிருப்பு அருகே இவரை போதையில் வழிமறித்த புன்னைக்காயலை சோ்ந்த ரஞ்சித் மகன் பெனிட்டோ, அண்டன் மகன் டா­ன், ரஜில்டன் மகன்களான காட்சன், டேனி, பெஸ்டெல்லா மகன் ரைசன் ஆகியோா் தகராறு செய்து கம்பால் தாக்கினராம்.

இதில், பலத்த காயமடைந்த ஜெனிபரை மீட்டு ஆத்தூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

சம்பவம் குறித்து ஜெனிபா் அளித்த புகாரின்பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.