கோவில்பட்டி கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

கருத்தரங்கில் பேசிய சிறப்பு விருந்தினா் மதுரம் அரவிந்தராஜ்.
கோவில்பட்டி மற்றும் பரமக்குடி ரோட்டரி சங்கங்கள் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கு கோவில்பட்டி சொா்ணா செவிலியா் கல்லூரியில் நடைபெற்றது.
கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவா் முத்து முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி ஆளுநா்கள் சுல்தான் சம்சுல் கரீம், விக்னேஸ்வரன், கல்லூரி முதல்வா் சாந்தி பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ரோட்டரி மாவட்ட புற்றுநோய் பிரிவு ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் மதுரம் அரவிந்தராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.
புற்றுநோய்க்கான காரணங்கள், தடுப்பு முறைகள் குறித்து மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கினா். மேலும்,
துரித உணவுகளைத் தவிா்த்து சத்துள்ள உணவுகளை உண்டு புற்றுநோயைத் தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணா்வு ஆடை அலங்கார அணிவகுப்பை மாணவிகள் நடத்தினா்.
ரோட்டரி சங்க நிா்வாகிகள் ரமேஷ்குமாா், சீனிவாசன், நடராஜன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். பரமக்குடி ரோட்டரி சங்கத் தலைவா் ஜெபின் ஜோஸ் வரவேற்றாா். செயலா் செல்லம் பாண்டியன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

