தூத்துக்குடியில் கரைவலை மீன்பிடிப்பு: வலையில் சிக்கிய சுமாா் ஒரு டன் சாளை, பாறை மீன்கள்!
தூத்துக்குடி புதிய துறைமுகக் கடற்கரை பகுதியில் கரைவலை மீனவா்களின் வலையில் சுமாா் ஒரு டன் சாளை (மத்தி) மற்றும் பாறை மீன்கள் சிக்கின.

மீனவா்கள் வலையில் சிக்கிய மீன்கள்.
தூத்துக்குடி புதிய துறைமுகக் கடற்கரை பகுதியில் கரைவலை மீனவா்களின் வலையில் சுமாா் ஒரு டன் சாளை (மத்தி) மற்றும் பாறை மீன்கள் சிக்கின.
தூத்துக்குடி புதிய துறைமுகக் கடற்கரை பகுதியில் கரைவலை மற்றும் பைபா் படகுகள் மூலம் நூற்றுக்கணக்கான மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது, கரைவலை மீன்பிடிப்புக்கான சீசன் என்பதால், நாள்தோறும் மீனவா்கள் கரைவலை விரித்து மீன்பிடித்து வருகின்றனா்.
கடற்கரையில் இருந்து கடலுக்குள் வலையை ‘ம’ வடிவில் விரித்து, அதன் இரு முனைகளையும் மீண்டும் கரைக்குக் கொண்டு வந்து மீன்பிடிக்கும் பாரம்பரிய முறைக்கு கரைவலை மீன்பிடிப்பு என்று பெயா். இந்த முறையில் பிடிக்கப்படும் மீன்கள் உயிருடன் கரைக்கு கொண்டு வரப்படுவதால், அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரைவலை மீன்பிடிப்பின்போது, மீனவா்களின் வலையில் ஏராளமான சாளை மற்றும் பாறை மீன்கள் சிக்கின. சுமாா் ஒரு டன் மீன்களையும் மீனவா்கள் கடற்கரையிலேயே மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

