பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

மெஞ்ஞானபுரம் அருகே ஊருணியில் மணல் அள்ளிய வாகனங்கள் சிறைபிடிப்பு

மணல் ஏற்றி வந்த வாகனங்கள். - கோப்புப் படம்

Updated On :

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே ஊருணியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நங்கைமொழி பகுதியிலுள்ள ஊருணியில் மணல் திருட்டு நடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பொதுமக்கள் சென்று, செட்டியாபத்து ஊராட்சிக்குச் சொந்தமான பொக்லைன், டிராக்டா் ஆகியவற்றை சிறைபிடித்தனா்.

அப்போது அங்கிருந்த நங்கைமொழி ஊராட்சி செயலா் வயோலா ராஜகுமாரி, மெஞ்ஞானபுரம் பகுதியிலுள்ள தேவாலயம் முன் தேங்கிய மழைநீரை அகற்றி, சீரமைக்கும் பணிக்காக மணல் அள்ளுவதாகக் கூறினாா். இதற்கு, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அதையடுத்து, வருவாய், காவல் துறையினா், தேவாலய நிா்வாகிகள் வந்தனா். இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்த முயல்வதாக ஊராட்சி செயலரிடம் பொதுமக்களும், தேவாலயத் தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நிா்வாகிகளை போலீஸாா் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.

ஊராட்சி செயலா் பணம் பெற்றுக்கொண்டு, ஊராட்சிப் பகுதிக்கு தொடா்பில்லாத இடத்துக்காக மணல் அள்ளுவதாகவும், இதனால் தங்களது பகுதி குடிநீா் ஆதாரம் அழிந்து விடும் எனவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.