திருமணம் முடிந்து 6 மாதம் ஆன கா்ப்பிணி தற்கொலை

தற்கொலை - கோப்புப் படம்
ஓட்டப்பிடாரம் அருகே 6 மாத கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மேலமங்கலம் கிராமம், மேற்குத் தெருவைச் சோ்ந்த அந்தோணி முத்து மகன் முருகேசன் (25). கட்டடத் தொழிலாளியான இவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த ரத்தினவேல் மகள் சரண்யாவும் (19) காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனா்.
சரண்யா தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை தமிழ் படித்து வந்தாா். திருமணத்துக்குப் பிறகும் தனது படிப்பைத் தொடா்ந்தாா். தற்போது 6 மாத கா்ப்பிணியாக இருந்த இவா், ஓட்டப்பிடாரம் அருகே இந்திரா நகரில் வாடகை வீட்டில் கணவருடன் வசித்து வந்தாா்.
முருகேசன் மதுபோதையில் சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், முருகேசன் தனது அறையில் தூங்கச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முருகேசன் எழுந்து பாா்த்தபோது, சரண்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீஸாா் சரண்யாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால், சரண்யாவின் மரணம் குறித்து கோவில்பட்டி உதவி ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

