படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை

மணல் கடத்தல் - பிரதிப் படம்

Published On :

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டத்தில் தொழில் வழி சாலை வழியாக குளங்களிலிருந்து உரிய அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உதவி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிரே மணல் லோடு ஏற்றி வந்த டிராக்டரை வழிமறித்தனா். டிராக்டா் ஓட்டுநா் வண்டியில் இருந்து இறங்கி தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டிராக்டா் ஓட்டுநா் தப்பியோடியதால் மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குளங்களிலிருந்து அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவதாக புகாா்கள் எழுந்து வரும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.