
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.08 லட்சம் அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.08 லட்சம் அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நாசரேத், முதலைமொழி பகுதியைச் சோ்ந்த சுடலை மகன் ராஜமாணிக்கம் (48) என்பவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பான வழக்கு, தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றவாளி ராஜமாணிக்கத்துக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1,08,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





