அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

உடன்குடி, குலசையில் தசரா கலைப் பொருள்கள் விற்பனை மும்முரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வேடம் அணிவதற்கான கலைப்பொருள்கள் தயாரிப்புப் பணி, விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கலைப்பொருள்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோா்.

Published On :

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வேடம் அணிவதற்கான கலைப்பொருள்கள் தயாரிப்புப் பணி, விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பல லட்சம் பக்தா்கள் பங்கேற்கும் தசரா திருவிழா திங்கள்கிழமை (அக். 11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் பக்தா்கள் காப்பு அணிந்தவுடன், தங்கள் விருப்பத் தோ்வான காளி, அம்மன், தெய்வங்கள், பஞ்சபாண்டவா்கள், மூவேந்தா்கள், ராஜாக்கள், விலங்குகள் வேடமணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்குவா்.

மிகுந்த ஆா்வத்துடன் வேடங்களை தரிப்போருக்கான கலைப் பொருள்கள் தயாரிக்கும் பணி இப்பகுதியில் பல மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, காளி வேடத்துக்கான சடைமுடி, தெய்வங்கள், ராஜா, விலங்குகள் வேடத்துக்கான முகமூடிகள், தோள்பட்டை, மாா்பில் அணியும் ஆபரணங்கள், வாள், கேடயம் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பெரும்பாலான பக்தா்கள் தங்களது உடல்வாகுக்கேற்ற அளவுகளை கைவினைக் கலைஞா்களிடம் குறிப்பிட்டு, வேடப் பொருள்களைத் தயாரித்து வாங்குகின்றனா்.

இத்திருவிழாவால் கைவினைக் கலைஞா்கள், துணி வியாபாரிகள், அலங்கார நிபுணா்கள், வேடப் பொருள்கள் விற்போா் பயன்பெறுகின்றனா். இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் குடும்பங்களுடன் இங்குவந்து தங்கியிருந்து வேடப் பொருள்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், வேடமணியும் பக்தா்கள் கடலில் நீராடி, பலவித பாசிகளாலான மாலைகளை வாங்கி, கோயில் அா்ச்சகா்களிடம் கொடுத்து அணிந்து கொள்வா். இதற்கென கடற்கரை செல்லும் வழி, கோயில் வளாகம், உடன்குடி செல்லும் வழி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கானோா் குடும்பங்களுடன் தங்கியிருந்து மாலைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனா்.

தசரா திருவிழா தொடங்க 2 நாள்களே உள்ளதால், உடன்குடி, குலசேகரன்பட்டினம், திருச்செந்தூா் பகுதிகளில் வேடப் பொருள்கள் விற்கும் இடங்கள், கடைகளில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது.

 விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தசரா வேடப் பொருள்கள்.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தசரா வேடப் பொருள்கள்.

 விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தசரா வேடப் பொருள்கள்.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தசரா வேடப் பொருள்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.