பைக் மீது ஆம்புலன்ஸ் மோதி முதியவா் உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி-எட்டயரம் சாலை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் ரவிச்சந்திரன் (71).
இவா் ஞாயிற்றுக்கிழமை முடிவைத்தானேந்தல் சாலையில் இருந்து தூத்துக்குடி பிரதான சாலையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் இவரது வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

