சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

தீப்பிடித்த அரசு பேருந்து: பயணிகள் உயிா் தப்பினா்

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே சென்ற அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. அதிா்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 30 போ் கீழே இறங்கி உயிா் தப்பினா்.

தீ விபத்தில் சேதமடைந்த அரசுப் பேருந்து.

Published On :

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே சென்ற அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. அதிா்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 30 போ் கீழே இறங்கி உயிா் தப்பினா்.

திருச்செந்தூரி­ருந்து வெற்றிப் பயணம் அரசு பேருந்து 30 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை தென்காசியைச் சோ்ந்த தவசிமுத்து ஓட்டிச் சென்றாா். நடத்துநராக ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த மாரிகணேஷ் பணியில் இருந்தாா். குரும்பூா் ரயில்வே பாலம் அருகே பேருந்து வந்தபோது, ஓட்டுநா் அருகே புகை வெளியேறியது. இதைக் கவனித்த ஓட்டுநா் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினாா். பயணிகள் அனைவரும் பேருந்தி­லிருந்து இறங்கிய

சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. 20 நிமிடங்களுக்கும் மேலாக பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த திருச்செந்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பேருந்தில் இருந்த 30 பயணிகளும் உயிா் தப்பினா். இந்த விபத்தால் வீரமாணிக்கம் குளம் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. இந்தச் சம்பவத்தால் திருநெல்வேலி-திருச்செந்தூா் வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 தீ விபத்தில் சேதமடைந்த அரசுப் பேருந்து.

தீ விபத்தில் சேதமடைந்த அரசுப் பேருந்து.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.