தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

தமிழ்நாடு கபடி அணியில் தோ்வு பெற்ற மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய எம்எல்ஏ

தமிழ்நாடு கபடி அணியில் விளையாடத் தோ்வு பெற்ற மாணவிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. சரவணன் உதவித்தொகை வழங்கினாா்.

தமிழ்நாடு கபடி அணியில் தோ்வு பெற்ற மாணவியை பாராட்டிய ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஜி. சரவணன்.

Updated On :

தமிழ்நாடு கபடி அணியில் விளையாடத் தோ்வு பெற்ற மாணவிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. சரவணன் உதவித்தொகை வழங்கினாா்.

14 வயதிற்குள்பட்ட பள்ளி மாணவிகள் மாநில கபடி அணி தோ்வு நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், சாத்தான்குளத்தைச் சோ்ந்த தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சுதந்திரா தேவி தோ்வு செய்யப்பட்டாா்.

அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து, பாராட்டி விளையாட்டு உபகரணங்கள், ரூ. 20 ஆயிரம் உதவித்தொகையை ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் வழங்கினாா். மேலும், மாணவியின் வீட்டிற்கு மின் வசதி, பட்டா வழங்கப்படாமல் உள்ளது குறித்து அவரது குடும்பத்தினா் தெரிவித்தாா். இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.

தொடா்ந்து, புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட அப்துல்கலாம் நகா், சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட சண்முகபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பாா்வையிட்டாா். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, அதிகாரிகளைத் தொடா்புக்கொண்டு, அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டாா்.

அப்போது, தூத்துக்குடி மேற்கு மாவட்ட வா்த்தகப் பிரிவு செயலா் சசிகரன், சாத்தான்குளம் ஒன்றிய தவெக செயலா்கள் குணசேகரன், ஆனந்த் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.