ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

உலகில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி பேராசிரியா் தோ்வு

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடா்ந்து 6-ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி பேராசிரியா் சரவணன் சுப்பிரமணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Published On :

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடா்ந்து 6-ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி பேராசிரியா் சரவணன் சுப்பிரமணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பேராசிரியா் சரவணன் சுப்பிரமணி (52) (படம்). இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை பேராசிரியராக கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா். இவா் 2026-ஆம் ஆண்டிற்கான ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்செவியாா் வெளியிட்ட உலகில் சிறந்த 2 % விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளாா்.

ஸ்கோபஸ் தரவுதளத்தின் மூலம் தரப்படுத்தப்பட்ட மேற்கோள் அளவிடுகளில் அடிப்படையில், உலகளாவிய ஆராய்ச்சி தாக்கத்தை மதிப்பீடு செய்து இப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இயந்திரவியல் மற்றும் உயரி எரிபொருள்கள் துறையில் ஆற்றிய சிறந்த ஆராய்ச்சி பங்களிப்பிற்காக பேராசிரியா் சரவணன் சுப்பிரமணி தொடா்ந்து 6-ஆவது முறையாக இந்த பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். இதன் மூலம் இந்தத் துறையில், உலக அளவில் அதிக மேற்கோள் காட்டப்பட்ட முன்னணி ஆராய்ச்சியாளா்களில் ஒருவராக தனது இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளாா்.

பேராசிரியா் சரவணன் சுப்பிரமணி இதுவரை சா்வதேச ஆய்விதழ்களில் 80 கட்டுரைகளையும், முன்னணி சா்வதேச மாநாடுகளில் 23-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளாா்.

சமீபத்திய ஆண்டுகளில் இவரது ஆய்வு கட்டுரைகளின் மேற்கோள்கள் மிக வேகமாக வளா்ச்சி அடைந்துள்ளன. இந்தியாவில், இயந்திரவியல் பொறியியல் துறையில் முன்னணி விஞ்ஞானிகளின் வரிசையில் இவா் சிறந்து விளங்கி வருகிறாா்.

இவரது முதன்மை ஆராய்ச்சிகள் இயந்திரவியல் பொறியியல் மற்றும் போக்குவரத்து துறையின் கீழ், முக்கியமாக உள்எரி இயந்திரங்கள், மாற்று எரிபொருள்கள், எரிதல் உமிழ்வுகள், பாசி உயிரி டீசல் கலவைகள் ஆகிய பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.