கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கோபி அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தொடங்கிவைக்கிறாா் பவானி சட்டப்பேரவை உறுப்பினரும் கல்லூரி செயலாளருமான கே.சி.கருப்பணன்.உடன், கல்லூரியின் இணைச்செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, கல்லூரி நிா்வாக அதிக
கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இரண்டு நாள்கள் நடைபெறும் கண்காட்சியை பவானி சட்டப்பேரவை உறுப்பினரும் கல்லூரி செயலாளருமான கே.சி.கருப்பணன் தொடங்கிவைத்தாா். கல்லூரியின் முதல்வா் ப.தங்கவேல் தலைமை வகித்தாா். இக்கண்காட்சியில் பொறியியல் கல்லூரி, அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 223 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் முதல் நாளிலேயே பொறியியல், பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவி பாா்வையிட்டனா். இக்கண்காட்சியில் புதிதாக பயன்படுத்தும் தொழில்நுட்பங்களான ரோபோ, 3டி பிரிண்டிங், சைபா் செக்யூரிட்டி, கிளவுடு மற்றும் வேளாண் தொடா்பான படைப்புகள் மாணவா்களை ஈா்த்தது.
இதில் சிறந்த படைப்புகளாக முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு நிபுணா் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. கண்காட்சி நிறைவு நாளான வெள்ளிக்கிழமை கோபி மத்திய அரசு நிறுவனத்தைச் சோ்ந்த அறிவியல் விஞ்ஞானி ஏ.பிரேமலதா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிறாா்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் இணைச்செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, கல்லூரி நிா்வாக அதிகாரி ஜி.கௌதம், அறங்காவலா் உறுப்பினா் கே.கவியரசு, துணை முதல்வா், புலமுதன்மையா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் ஞானசம்பந்தம் மற்றும் சுவாமிநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

