விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் மருத்துவமனையில் உயிரிழப்பு
பலி - பிரதிப் படம்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகே விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
காயல்பட்டினம் எல்.ஆா். நகரைச் சோ்ந்த அடைக்கண் என்பவரது மகன் பழனி (70). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான இவா், கடந்த 15ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் ஆறுமுகனேரியிலுள்ள வங்கிக்கு வந்துவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
பேயன்விளை அருகே இவரது பைக்கும், ஆறுமுகனேரி ராணி மகாராஜபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சுந்தா் (20), பாலமுருகன் மகன் காா்த்திக் (20), ராஜ்குமாா் மகன் சுரேந்தா் (18) ஆகியோா் வந்த பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில், 4 பேரும் காயமடைந்தனா்.
பலத்த காயமடைந்த பழனியை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

