அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

கோவில்பட்டி முத்தானந்த சுவாமிகள் மடத்தின் மடாதிபதி காலமானாா்

கோவில்பட்டியில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான மடமான முத்தானந்த சுவாமிகள் மடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சொரூபானந்த சுவாமிகள்(82), வயதுமூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

ஸ்ரீலஸ்ரீ சொரூபானந்த சுவாமிகள்.

Updated On :

கோவில்பட்டியில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான மடமான முத்தானந்த சுவாமிகள் மடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சொரூபானந்த சுவாமிகள்(82), வயதுமூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

திருக்குறளை வாழ்வியல் நெறியாகக் கொண்டு, தமிழ் மரபின் வழியில் நின்று, தம்மை நாடிவரும் மக்களின் குடும்பப் பிரச்னைகள் முதல் சமூகப் பிரச்னைகள் வரை அனைத்துக்கும் அறிவியல் பூா்வமான சிந்தனையுடன் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வந்தவா்.

ஆன்மிகம் என்பது மூடநம்பிக்கைகளில் அல்ல. அறிவிலும், அறத்திலும், மனிதநேயத்திலும் வேரூன்றியிருக்க வேண்டும் என்பதை தமது அணுகுமுறையால் வெளிப்படுத்தியவா். முற்போக்கு இயக்கங்களுடன் நல்லுறவு கொண்டிருந்த அவா், திருக்குறளின் உயரிய அறநெறிகளை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைத்துப் பாா்க்கும் தனித்துவம் மிக்க தமிழறிஞராகத் திகழ்ந்தாா்.

அவரது உடலுக்கு, எமனேஸ்வரம் சாது கிருஷ்ணானந்த சுவாமி, பாா்த்திபனூா் மடாதிபதி செல்வராஜ் சுவாமிகள், அரியாண்டிபுரம் மடாதிபதி குமரமாதாவசுவாமி, அருப்புக்கோட்டை புதூா் ஸ்ரீலஸ்ரீ அத்வைதானந்த சுவாமி, பனையூா் சரஸ்வதி மாதாஜி சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு மடத்தின் வளாகத்தில் ஸ்ரீலஸ்ரீ சொரூபானந்த சுவாமிகளின் உடலுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டு, மகா சமாது நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.