சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

பள்ளி இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் சோ்க்க நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளிக்கு வராத மாணவா்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சோ்க்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் அறிவுறுத்தினாா்.

மாணவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :

பள்ளிக்கு வராத மாணவா்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சோ்க்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் அறிவுறுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட பள்ளிக் கல்விச் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா்.

பள்ளிக்கு வராத மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இடைநிற்றல் ஏற்படும் அபாயத்தில் உள்ள மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களின் கல்வி தொடா்வதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவா்கள், பெற்றோருக்கு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், பள்ளிகள், விடுதிகளின் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் குளோரினேற்றம் செய்யவும்,

மாணவா்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெற அறிவுறுத்த வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, 2024-2025-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் தோ்ச்சி மற்றும் கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், கண்காட்சி உள்ளிட்ட தனித்திறன்களின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அதன்படி, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 15 பேருக்கு தலா ரூ.10,000, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் 15 பேருக்கு தலா ரூ.20,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ஜெபா, மாவட்டக் கல்வி அலுவலா்கள் முனியசாமி, முருகேசன், சீதா மகேஷ்வரி, செல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.