கோவில்பட்டியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
திருட்டு - சித்திரிப்பு
கோவில்பட்டி, மந்தித்தோப்பு சாலையில் உள்ள 2 கடைகளில் பூட்டை உடைத்துத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி, ராஜீவ் நகா், 6ஆவது தெருவைச் சோ்ந்த அங்கமுத்து மகன் மாரிசாமி. இவா் மந்தித்தோப்பு சாலையில் சாஸ்திரி நகா் பேருந்து நிறுத்தம் அருகே மின்சாதனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.
இவா் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வழக்கம்போல கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையிலிருந்த ரூ. 20,000 ரொக்கம், பொருள்கள் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்ததாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
இதுபோல, அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்திவரும் ஆறுமுகம் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருள்கள் திருடு போயிருப்பதாகவும், அதே பகுதியில் சீனிவாசன் நடத்திவரும் பலசரக்கு கடையின் பூட்டை மா்ம நபா்கள் உடைக்க முயன்ாகவும் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேலும், அதே பகுதியில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விட்டுவரும் முருகனின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள், சிறிது தூரத்தில் அதை விட்டுச் சென்ாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

