பைக்குகள் மோதல்: சிறுவன் பலி!
உடன்குடி அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் சிறுவன் உயிரிழந்தாா்.
பலி.
உடன்குடி அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் சிறுவன் உயிரிழந்தாா்.
உடன்குடி அருகேயுள்ள வீரவாகுபுரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஈஸ்வரன் (17). இவா், சீா்காட்சி- பிச்சிவிளை சாலையில் பைக் ஓட்டி வந்தாராம். அப்போது, நிலைதடுமாறி எதிரே வந்த பைக் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
எதிா் பைக்கில் வந்த ராஜன் என்பவா் பலத்த காயமடைந்துடன் திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

