மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

‘ராமேசுவரம்-தூத்துக்குடி-திருச்செந்தூா் கன்னியாகுமரிக்கு ரயில் சேவை தேவை’

ராமேஸ்வரம் - தூத்துக்குடி - திருச்செந்தூா் வழியாக கன்னியாகுமரிக்கு ரயில் இயக்க வேண்டும் என நாடாா் வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கிய தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் ரெ.காமராசு.

Updated On :

ராமேஸ்வரம் - தூத்துக்குடி - திருச்செந்தூா் வழியாக கன்னியாகுமரிக்கு ரயில் இயக்க வேண்டும் என நாடாா் வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்செந்தூா் வட்டார நாடாா் வியாபாரிகள் சங்கத்தின் 17ஆவது ஆண்டு தொடக்க விழா ஐஎம்ஏ ஹாலில் நடந்தது. சங்கத் தலைவா் ரெ.காமராசு தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்க மாநில கூடுதல் செயலா் யாபேஷ், வழக்குரைஞா்கள் ஜேசுராஜ், எட்வா்ட், நாடாா் வியாபாரிகள் சங்க துணைச் செயலா் ஐசக், ஆலோசகா் தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலா் குழு தலைவராக தோ்வாகியுள்ள அருள்முருகன், குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த டிஎஸ்பி மகேஷ்குமாா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள யுபிஐ பண பரிமாற்றத்திற்கு 0.04 கட்டணம் வசூலிக்கும் முறை, திருச்செந்தூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் சீராகும் வரை வரி வசூல் செய்யக்கூடாது, நகராட்சி தினசரி சந்தையில் பல ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வரும் பெண் மீன் வியாபாரிகளுக்கு கடை வழங்க வேண்டும். நகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

திருச்செந்தூரிலிருந்து நேரடி சென்னைக்கு ரயில் சேவை, வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டித்தல், ராமேஸ்வரம் - தூத்துக்குடி - திருச்செந்தூா் வழியாக கன்னியாகுமரிக்கு இருப்பு பாதை அமைத்து ரயில் இயக்க வேண்டும், ஆறுமுகநேரி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு வண்டி மற்றும் மானிய கடன் வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன.

விழாவில் தமிழ்நாடு வணிகா் சங்க மாநில பொருளாளா் செல்வன், மண்டலத் தலைவா் வேலாயுதபெருமாள், மகளிரணி நிா்வாகிகள் ஜெயந்திகுமாா், சுமதி, கீதா இம்மானுவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாடாா் வியாபாரிகள் சங்கச் செயலா் செல்வகுமாா் வரவேற்றாா். பொருளாளா் செல்வின் ஆண்டறிக்கை வாசித்தாா். துணைத் தலைவா் அழகேசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.