நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

காயல்பட்டினம் ஆடு மாடு தொட்டி விவகாரம்: பசுமை தீா்ப்பாயம் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ஆடு, மாடு அறுப்பு தொட்டியை மூடுவதற்கு பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், உயா்நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 12:03 am IST

ஆடு, மாடு அறுப்பு தொட்டியை மூடுவதற்கு பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், உயா்நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

காயல்பட்டினம், பப்பரப்பள்ளி பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதத்தில் பல ஆண்டுகளாக ஆடு, மாடு அறுப்பு தொட்டி செயல்பட்டு வருவதாக மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) தொடுத்த வழக்கில், ஜூலை 24-ஆம் தேதி தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தென்மண்டல கிளையானது ஆடு, மாடு அறுப்புத் தொட்டி மூட உத்தரவிட்டது.

பசுமை தீா்ப்பாயத்தின் இந்தத் தடை உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் காயல்பட்டினம் நகராட்சி நிா்வாகம் வழக்குத் தொடா்ந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது காயல்பட்டினம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.சரவணன் முன்னிலையானாா்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வழக்குரைஞா் மாதுரி முன்னிலையானாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.தண்டபாணி, என்.திலீப் குமாா் கொண்ட அமா்வு அளித்த தீா்ப்பில், பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து அடுத்த விசாரணையை செப்.7 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.