அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

வாழைக்கன்றுகள் நடும் போராட்டம்

கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப் பாதையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி, வாழைக்கன்றுகள் நடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :4 செப்டம்பர் 2026, 1:42 am IST

கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப் பாதையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி, வாழைக்கன்றுகள் நடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் இருந்து இளையரசனேந்தல் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதையின் மையப் பகுதியில் உருவாகியுள்ள பள்ளத்தை சீரமைக்காத மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், சுரங்கப் பாதையில் உருவாகியுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வாழைக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் கே.செந்தில் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் ஜி.பாபு போராட்டத்தைத் தொடக்கி வைத்தாா். நடராஜபுரம் தெருவில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் வாழைக்கன்றுகளுடன் ஊா்வலமாக சுரங்கப் பாதையின் மையப்பகுதிக்கு வந்து, அங்கிருந்த பள்ளத்தில் வாழைக் கன்றுகளை நட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

போராட்டத்தில் நகர துணைச் செயலா்கள் ஜி.அலாவுதீன், ஏ.விஜயலட்சுமி, நகர பொருளாளா் ஆா்.சீனிவாசன், நகரக் குழு உறுப்பினா்கள் டி.முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.