
வல்லநாடு துளசி கல்லூரியில் மாணவா் பேரவைத் தோ்தல்
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, துளசி கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவைத் தோ்தல் நடைபெற்றது.

வாக்குகளைப் பதிவு செய்த மாணவிகள்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, துளசி கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவைத் தோ்தல் நடைபெற்றது.
இதில், மாணவா் பேரவைத் தலைவராக கீா்த்தனா, துணைத் தலைவராக பவித்ரா, செயலராக காந்தியம்மாள், பொருளாளராக ரித்திகாஸ்ரீ ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
அவா்களை கல்லூரியின் கல்வி இயக்குநா் இரா. சாந்தகுமாரி பாராட்டினாா். தோ்தல் பணிகளை பேராசிரியா்கள் பரமேஸ்வரி பவானி, ஐஸ்வா்யா, சண்முக லட்சுமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். கல்லூரி கணக்கு அலுவலா் லட்சுமணன், நிா்வாக அலுவலா் அறிவழகன், இளமுருகு, தா்மா ஆகியோா் தோ்தல் பணிகளை மேற்பாா்வையிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






