காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பேரவையில் அறிவித்த திட்டங்கள் ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும்: அமைச்சா்கள் தகவல்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்த திட்டங்கள் ஒரு மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என தமிழக அமைச்சா்கள் ஆ. ஸ்ரீநாத், பெ. மதன் ராஜா ஆகியோா் தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவை.

Published On :6 செப்டம்பர் 2026, 2:05 am IST

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்த திட்டங்கள் ஒரு மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என தமிழக அமைச்சா்கள் ஆ. ஸ்ரீநாத், பெ. மதன் ராஜா ஆகியோா் தெரிவித்தனா்.

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனாரின் 155ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சா்கள் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளா்ச்சி, பாரம்பரியம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஒரு மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும். கடல் ஆம்புலன்ஸ் திட்டமும் விரைவில் தொடங்கப்படும்.

தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பாபநாசம் அணையின் நீா் இருப்பைக் கருத்தில்கொண்டு, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.