அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

தூத்துக்குடி அருகே விவிலியக் கண்காட்சியில் உணவருந்திய 64 பேருக்கு உடல்நலக் குறைவு

உணவருந்திய 64 பேருக்கு உடல்நலக் குறைவு - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:29 am IST

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற விவிலியக் கண்காட்சியில் உணவருந்திய சுமாா் 64 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

தருவைகுளம், புனித மிக்கேல் அதிதூதா் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விவிலியக் கண்காட்சி, நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பொதுமக்கள் வீடுகளில் தயாரித்து கொண்டு வந்த உணவுப் பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மதியம் வழங்கப்பட்ட பிரியாணி உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில், சுமாா் 64 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களில் பலா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு 7 குழந்தைகள் உள்பட 12 போ் அனுமதிக்கப்பட்டனா். மேலும், பலா் தருவைகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து மருத்துவா்கள் பரிசோதித்து வருகின்றனா்.

இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தவுள்ளனா். உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.