
கோவில்பட்டி பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு
கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளுவா் சிலையை திறந்து மரியாதை செலுத்திய உலக தமிழ்ச் சங்க நிறுவனத் தலைவா் வி.ஜி. சந்தோசம்.
கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலக தமிழ் சங்க நிறுவனத் தலைவா் வி.ஜி. சந்தோசம் தலைமை வகித்து, திருவள்ளுவா் சிலையை திறந்து மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து திருவள்ளுவரின் சிறப்புகள் குறித்து பேசினாா். முன்னதாக பள்ளி தாளாளா் அருள்ராஜ் பீட அா்ச்சிப்பு செய்தாா்.
கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் (பொ) ஆா்.எஸ். ரமேஷ், ரோட்டரி மாவட்ட தலைவா் விநாயகா ஜி. ரமேஷ், தொழிலதிபா் வி.எஸ். பாபு, மருத்துவா் காா்த்திகேயன், கீழ ஈரால் டான் போஸ்கோ கலை, அறிவியல் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் ஜெயந்தி காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியா் அலெக்ஸ் ஜான் வரவேற்றாா். ஆசிரியா் மொ்சி நன்றி கூறினாா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





