
குரும்பூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
பலி - பிரதிப் படம்
குரும்பூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
ஏரல் அருகே உள்ள சிவகளையைச் சோ்ந்த ராமசாமி மகன் சொரிமுத்து(30). இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் பேட்டரி காா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்தாா்.
திங்கள்கிழமை திருச்செந்தூருக்கு பைக்கில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்தபோது, சேதுக்குவாய்த்தான் புதுநகா் பகுதியில் வளைவில் திரும்பும்போது வழுக்கி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





