கோவில்பட்டியில் மின்னல் பாய்ந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

பலி
கோவில்பட்டியில் மின்னல் பாய்ந்ததில் காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், சிவனனைந்தபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்து இருளாண்டி மனைவி கனகலட்சுமி (34). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
கனகலட்சுமியும், உறவினரான மாரியம்மாளும் சுந்தரலிங்கபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால், இருவரும் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பினராம்.
அப்போது, கனகலட்சுமி மீது மின்னல் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




